முகத்தில் கொப்பளம் போன்று தோன்றும் இந்த முகப்பருக்கள் தேவையில்லாத சிக்கலை உண்டாக்கும்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

முகப்பருக்கள் பொதுவாக வயது வித்தியாசமின்றி உண்டாகக்கூடியது. ஆனால், அதிகளவில் பதின்ம பருவத்தினரையே பாதிக்கிறது.

Image Source: pexels

காரணம் என்ன?

ஹார்மோன்கள் மாற்றம், சரும வறட்சி, எண்ணெய் பசை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த முகப்பருக்கள் உண்டாகிறது.

Image Source: pexels

வீட்டு வைத்தியங்கள்

உணவுப் பழக்கங்கள், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த முகப்பருக்களை சரி செய்யலாம்.

Image Source: pexels

மஞ்சள்

மகத்துவமான மருத்துவ குணம் கொண்டது மஞ்சள். இதில் உள்ள குர்குமின் அழற்சி, வீக்கத்திற்கு சிறந்த மருந்தாகும். பெண்கள் இதை பயன்படுத்துவது சிறந்தது.

Image Source: Canva

வேம்பு

வேப்பிலை ஏராளமான நன்மைகளை கொண்டது. வேப்பிலை கொழுந்து நீரைக் கொண்டு முகத்தை கழுவி வருவது நன்மை பயக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

Image Source: pexels

தக்காளி சாறு

லைகோபீனை அதிகம் கொண்டது தக்காளி. சருமத்தில் உள்ள துளைகளை கட்டுப்படுத்தி அதிகப்படியான எண்ணெய்யை கட்டுப்படுத்தும்.

Image Source: Canva

கற்றாழை

கற்றாழை ஏராளமான நன்மைகளை கொண்டது. கற்றாழையில் உள்ள பசை முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

Image Source: Canva

தேன்

இயற்கையாக சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது தேன். முகப்பருக்களின் மீது தடவினால் விரைவில் சரியாகும்.

Image Source: Canva

ஐஸ் தெரபி

முகப்பருக்கள் மீது ஐஸ் கட்டிகளை தேய்த்தால் முகப்பருக்களின் வீக்கத்தை குறைக்கும்.

Image Source: Canva