நகங்களை இயற்கையாகவே வலிமைப்படுத்தும் வழிகள் என்னென்ன? என்பதை காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

நகங்களின் ஆரோக்கியம் ஏன் முக்கியம்?

அடிக்கடி நகங்கள் உடைவது ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கிய குறைபாட்டை பிரதிபலிக்கிறது.

Image Source: Pexels

நகங்கள் அடிக்கடி உடைவது ஏன்?

ரசாயன பயன்பாடு, அதிகப்படியான ஈரப்பதம், கடினமான சோப்புகள் பயன்படுத்துதல், அதிக அழுத்தம் போன்றவை நகங்கள் அடிக்கடி உடைவதற்கு காரணமாக உள்ளது.

Image Source: Pexels

நகங்களின் வலிமையை மேம்படுத்தலாம்

எளிதான பழக்கவழக்கங்கள் மூலமாக நகங்களை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.

Image Source: Pexels

கற்றாழைச் சாறு

உடைந்த, காயமடைந்த நகங்களை சரி செய்ய கற்றாழைச் சாறு பக்கபலமாக உள்ளது. நகங்களைச் சுற்றி, நகக்கண்களில் மசாஜ் செய்யலாம். இது நகத்தையும் பலப்படுத்தும்.

Image Source: Pinterest/thriftyfun

உடைந்த நகங்கள் வளர

பூண்டை நகங்களில் தேய்த்து வந்தால் நகங்களின் வளர்ச்சி தூண்டப்படும். இதன் இயற்கை சேர்மங்கள் உடைந்த நகங்களை வளரத் தூண்டும்.

Image Source: Pinterest/missxotic

கால்சியம், வைட்டமின் சி

பால், தயிர், கீரை போன்ற உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். நகங்களின் வளர்ச்சிக்கு கால்சியம், வைட்டமின் சி அவசியம் ஆகும்.

Image Source: Pexels

உப்பு கலந்த தேங்காய் எண்ணெய்

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யில் 2 சிட்டிகை உப்பு கலந்து அதில் நகங்களை ஊற வைப்பது நல்லது ஆகும். இது வறட்சியை குறைக்கும்.

Image Source: Pinterest/popsugar

எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெய் மசாஜ்

வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து அதில் மசாஜ் செய்வது நல்லது ஆகும். வாரத்திற்கு 2-3 முறை செய்வது நல்லது ஆகும்.நகங்களை வலுப்படுத்துகிறது.

Image Source: Pinterest/djvh01161960

ரசாயன நக சாயங்களை தவிர்க்கவும்

தரமற்ற ரசாயன நக சாயங்களை தவிர்ப்பது நல்லது ஆகும். இந்த சாயங்கள் நகங்களை பலவீனப்படுத்தும்.

Image Source: Pexels