உடல் எடையை குறைக்க தினமும் இத செய்யுங்க.. அப்பறம் பாருங்க

Published by: ராஜேஷ். எஸ்

உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் 5 முதல் 8 பாதாம் பருப்புகள் சாப்பிட்டால் போதும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 பாதாம் பருப்புகள் சாப்பிடலாம்.

பாதாம் இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஊறவைத்த பாதாம் பருப்புகள் எளிதில் ஜீரணமாகும். மேலும் இவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ நிறைந்துள்ளன.

பாதாம் சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும்.

அதிக பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கலோரிகள் அதிகரிப்பதால் எடை அதிகரிக்கலாம்.

பாதாம் பருப்பில் உள்ள மெக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

பாதாம் பருப்புடன் மசாலா அல்லது உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நட்ஸ் அலர்ஜி இருந்தால் டாக்டர் ஆலோசனைக்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும்.