சர்க்கரை நோய் உள்ளவர்கள் ராகி மாவு சாப்பிடலாமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ராகியில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இதை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராது.

ராகியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குளுக்கோஸ் வெளியீடு மெதுவாக நிகழ்கிறது.

ராகி சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காது. இது எடை நிர்வாகத்திற்கு உதவும்.

ராகி தொடர்ந்து உட்கொண்டால், இன்சுலினுக்கு உடல் நன்றாக பதிலளிக்கும் வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கும், செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும், க்ளூட்டன் இல்லாத உணவு சிறந்தது.

ராகியில் உள்ள மெக்னீசியம் உடலில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம். ராகியில் உள்ள தாமிரம் இதயத்தை பாதுகாக்க உதவும்.

இது உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

ராகியை, ராகி தோசை, ராகி அடை, ராகி வடை போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

அதிகமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அதிகரிக்கலாம். ஆகையால், குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.