சீரகம் வயிற்று உபாதைக்கு மிகவும் நல்லது ஆகும். சீரக தண்ணீர் வயிற்று பிரச்சினைக்கு மிகவும் நல்லது ஆகும்.
கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தியது இந்த நிலவேம்பு கசாயம். காய்ச்சல், தலைவலி, இருமல், சளி வராமல் இருக்க தடுக்க உதவும்.
சளி, இருமலைப் போக்கும் நல்ல விஷயமாக துளசி. துளசி இலையை சாறுவாக பிழிந்து இந்த கசாயத்தை குடிக்கலாம்.இதில் சீரகம், மிளகு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது சிறப்பாகும்.
வெட்டிவேர் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். இதை பயன்படுத்தி கசாயமாக்கி குடிக்கும்போது உடலுக்கு ஆரோக்கியம் ஆகும்.
சுக்கு காபி தமிழ்நாட்டில் அதிகளவு பயன்பாட்டில் உள்ள ஒருவகை பானம். இதில் இஞ்சி, சுக்கு தட்டிப்போட்டு சுக்குகாபியாக போடப்படுகிறது.
ஆவாரம் பூ ஏராளமான மருத்துவ குணம் கொண்டது ஆகும். ஆவாரம் பூ தேநீர் தற்போது கடைகளிலும் கிடைக்கிறது. ரத்தத்திற்கும், மேனி பளபளப்பிற்கும் நல்லது.
கொள்ளு ரசம் தமிழர்களின் பாரம்பரிய உணவாகவே உள்ளது. கொள்ளு ரசம் அஜீரணக் கோளாறு, சளி பிரச்சினைக்குத் தீ்ரவாக உள்ளது.
ஓம தண்ணீர் வயிற்று உபாதைக்கு மிகவும் தகுந்த மருந்தாக உள்ளது. இது சளி பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது.
கேரளாவின் பழமையான இலைகளில் ஒன்று பனிக்கூர்கா இலை. இருமல், சளி மற்றும் செரிமானத்தை சரி செய்யும் குணம் வாய்ந்தது.