மீனில் ஏராளமான சத்து உள்ளது. குறிப்பாக, சாலமீன், மத்தி, நெத்திலி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. இது மூளையின் செயல்பாடு மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸ் ஆரோக்கியமான கொழுப்பை கொண்டது. கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளது. எலும்பு, தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
ஏராளமான நன்மைகளைத் தரும் முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. தசை வளர்ச்சி, வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளது.
நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் கே இந்த அவகேடோ பழத்தில் உள்ளது. மேலும், ஆரோக்கியமான கொழுப்பும் இதில் உள்ளது.
ஆன்டி ஆக்சிடன்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது இந்த டார்க் சாக்லேட். ரத்த ஓட்டத்திற்கு பக்கபலமாக உள்ளது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஆலிவ் பழங்கள் பக்கபலமாக உள்ளது.
இதில் புரதச்சத்துக்களுடன் ஆரோக்கியமான கொழுப்பும் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும்.
சியா, ஆளி, சணல் விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இதயத்தின் செயல்பாட்டிற்கு பக்கபலமாக உள்ளது.
புரதம், புரோபயோடிக்குகளுடன் ஆரோக்கியமான கொழுப்பும் தயிரில் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் பக்கபலமாக உள்ளது.