இவங்கெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாதா? - செக் பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கத்தரிக்காய் சாப்பிட்ட பிறகு தோல் அரிப்பு, தடிப்பு, சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும்.

கத்தரிக்காய் சிலருக்கு அமிலத்தன்மையை அதிகரித்து, வாயு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கத்தரிக்காயில் ஆக்ஸலேட்டுகள் இருப்பதால் சிறுநீரக கற்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.

அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படலாம். மிதமாக சாப்பிடுவது நல்லது.

கத்தரிக்காய் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தலாம்.

சரும அரிப்பு, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அவற்றின் அறிகுறிகள் மேலும் அதிகரிக்கலாம்.

கத்தரிக்காயில் உள்ள சில பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கின்றன.

இரத்த அழுத்தம் அல்லது மனச்சோர்வுக்கான மருந்துகள் உட்கொள்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.

வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு அடிக்கடி ஏற்படுபவர்களுக்கு கத்தரிக்காய் சற்று கனமாக இருக்கலாம்.

கத்தரிக்காயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சமையலில் சேர்க்கலாம். சாப்பிடாமல் தவிர்க்கலாம்.