கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கோடையில் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு 8 -10 கிளாஸ் தண்ணி குடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது

உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.

நீரிழப்பு சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் செரிமான அமைப்பு மற்றும் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படும்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படலாம்.

சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கும், செரிமானத்திற்கும் தண்ணீர் மிகவும் அவசியம்.