வெண்ணெய் கெட்டது கிடையாது.. மிகவும் நல்லது! வெண்ணெயில் தாதுக்கள், வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் கே2, ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன இது உடல் சூட்டை குறைத்து, வாதம், பித்தம் ஆகியவற்றால் ஏற்படும் கோளாறுகளை போக்கும் வெண்ணெய் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும், ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும், உடலை வலுவாக்கும், குரலை வளமாக்கும் இதை உட்கொள்வதுடன் வெளிப்புரமாகவும் பயன்படுத்தலாம். உதட்டில் தடவினால் வெடிப்புகள் நீங்கும் சரும வறட்சியை போக்கும். சரும எரிச்சலையும் போக்கும் கபம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், பருமனான உடலை கொண்டவர்கள், சர்க்கரை நோய் கொண்டவர்கள் வெண்ணெயை சாப்பிட கூடாது வளரும் குழந்தைகள் வெண்ணெயை உட்கொள்ளும் போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான வளர்ச்சி அடைவார்கள் வெண்ணெய் தடவினால் உதடுகள் மற்றும் குதிகால் வெடிப்பு குறைகிறது