பிரெஞ்சு முத்தம் கொடுத்தால் இந்த நோய்கள் வருமாம் - எச்சரிக்கையா இருங்க

Published by: ABP NADU

பிரெஞ்சு முத்தம் மூலம் வாய்வழி ஹெர்பெஸ் நோய் பரவுகிறது.

இதன் காரணமாக உதடுகளிலும் வாயின் உள்ளேயும் சிறு சிறு நீர் கொப்புளங்கள் மற்றும் எரிச்சலூட்டும் புண்கள் தோன்றும்.

கிஸ்ஸிங் டிசீஸ் என்று அழைக்கப்படும் மோனோநியூக்ளியோசிஸ் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சோர்வு, தொண்டை வலி, காய்ச்சல் ஏற்படும்.

கை, கால், வாய் நோய் காக்ஸாக்கி வைரஸால் வருகிறது.

இதனால் வாயின் உள்ளே கொப்புளங்கள் கைகள் கால்களில் தடிப்புகள் வரும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சைட்டோமெகல்லோவைரஸ் வரும்.

வாயில் உள்ள ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனப்படும் பாக்டீரியா முத்தம் மூலம் பரவுகிறது.

இதன் காரணமாக ஈறுகளில் வீக்கம், இரத்தம் வடிதல், பற்கள் சிதைவுறும் ஆபத்து உள்ளது.

ஹெபடைடிஸ் பி வைரஸ் இருக்கும்போது ஈறுகளில் இருந்து ரத்தம் வருவது போன்ற நிலைமைகளில் பரவும் வாய்ப்பு உள்ளது.

கண்வலி நோய் கூட பிரெஞ்சு முத்தம் மூலம் பரவலாம்.

மூளை மற்றும் தண்டுவடத்தை பாதிக்கும் மெனிங்கோகோகல் பாக்டீரியா பிரெஞ்சு முத்தம் மூலம் பரவுகிறது.

உமிழ்நீர் மூலம் எச்ஐவி பரவாது என்றாலும் இருவரின் வாயிலும் ஈறு நோய்கள் இருந்து ரத்தம் கசிந்தால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.