கிராம்பில் ஏராளமான ஆராக்கியம் அடங்கியுள்ளது. வாய் ஆரோக்கியத்தில் கிராம்பு முக்கிய பங்காற்றுகிறது.
இதன் சுவை, நறுமணத்திற்காக மட்டுமின்றி பாரம்பரிய வைத்தியத்தில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை வைத்தியத்திலும் கிராம்பு தனித்துவம் வாய்ந்தது.
கிராம்பில் உள்ள யூஜெனால் பல் வலியைத் தீர்க்கும் நிவாரணியாக உள்ளது.
தூங்கும் முன்பு கிராம்பை நன்றாக மென்றுவிட்டு தூங்குவதால் அதில் உள்ள சேர்மங்கள் உமிழ்நீருடன் சேர்ந்து ஏராளமான நன்மைகளை உண்டாக்கும்.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. கிராம்பை மென்று சாப்பிட்டு தூங்குவதால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கொல்கிறது.
செரிமான காலத்தில் மிகப்பெரிய பங்கை கிராம்பு ஆற்றுகிறது. இரவில் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
ஈறுகள் ஆரோக்கியத்திற்கு கிராம்பு முக்கியமானது. பாக்டீரியாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இரவில் வயிற்றில் ஏற்படும் அஜீரணத் தொல்லையைச் சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வறட்சியை சரி செய்யும் ஆற்றல் கொண்டதால் தொண்டை எரிச்சல், வறட்டு இருமலை கிராம்பு சரி செய்கிறது.
தூங்கும் முன்பு வாயில் வைத்து நன்றாக மென்றுவிடலாம். இதை முறையாக பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.