இரவில் ஐஸ்கிரீமா சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஐஸ்கிரீமில் உள்ள அதிகப்படியான இனிப்பு சர்க்கரையின் அளவை திடீரென உயர்த்திவிடும்.

இரவில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் ஐஸ்கிரீமின் கலோரிகள் எரிக்கப்படுவதில்லை, அவை நேரடியாக வயிற்று கொழுப்பாக மாறுகின்றன.

சர்க்கரை அளவுகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காரணமாக இரவில் அடிக்கடி விழித்தல் அல்லது அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குளிர்ந்த ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தொண்டை தொற்று, சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சளி அல்லது அலர்ஜி உள்ளவர்களுக்கு இரவில் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது நிலையை மேலும் மோசமாக்கும்.

நீரிழிவு மற்றும் தைராய்டு நோயாளிகள் இரவில் ஐஸ்க்ரீமை தவிர்க்க வேண்டும்.

உணவுக்குப் பிறகு உடனடியாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும்

இரவில் ஐஸ்கிரீம் பதிலாக பழங்கள் அல்லது டார்க் சாக்லேட் சாப்பிடலாம்

ஐஸ்க்ரீமை தினமும் சாப்பிடும் பழக்கமாக மாற்றாமல் இருப்பது நல்லது.