தினமும் டயட்டில் இருக்க வேண்டிய சூப்பர் ஃபுட்ஸ்!

Published by: ஜான்சி ராணி

நார்ச்சத்து, மினரல்ஸ், வைட்டமின்ஸ், ஆரோக்கியமான கொழுப்புச்சத்து ஆகியவை கிடைக்க தினமும் நட்ஸ், சீட்ஸ் சாப்பிட வேண்டியது அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சியா சீட்ஸ், இதில் ஒமேகா-3, நார்ச்சத்து, புரோட்டீன் நிறைந்துள்ளது. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஸ்மூத்தி, யோகர்ட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம்.

ஃப்ளாக் சீட்ஸ் - இதிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவும். ஓட்ஸ், சாலட் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

பூசணி விதை - மெக்னீசியம், ஜிங்க், ஆன்டி- ஆன்ஸிடண்ட் ஆகியவை நிறைந்தவை. இதை தினமும் சாப்பிடுவது நல்லது.

எள் - எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சாலட், ஓட்ஸ் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

பாதாம், வால்நட், பிஸ்தா, கருப்பு திராட்ச்சை ஆகியவற்றையும் ஊறவைத்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

சீட்ஸ், நட்ஸ் வகைகளை தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லது.

சூரிய காந்தி விதைகளில் வைட்டமின் -இ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. இது இன்ஃப்ளமேசன் ஏற்படாமல் தடுக்க உதவும்.