ஹெல்தியான ஸ்நாக்ஸ் - மக்கானா சாப்பிடுங்க!
வேலைக்கு இடையே ப்ரேக், ஏதாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றும்போது, எண்ணெயில் பொரித்த, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாமல், ஆரோக்கியமானவற்றை சாப்பிடலாம்.
மக்கானா ஊட்டச்சத்து மிகுந்த ஒன்று. ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது இதில் இனிப்பு, கார வகை உணவுகளை செய்து சாப்பிடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மில்க் ஷேக்குகளில் மக்கானா சேர்த்து சாப்பிடலாம். உலர்ந்த வறுத்த தாமரை விதையை பால், நட்ஸ், சியா சீட்ஸ், இதோடு ஓட்ஸ் அல்லது ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்க்கலாம்.
மக்கானவை,ஆலிவ் எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து, சிறிது சீரக தூள், மிளகாய் தூள் போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.
மில்க் ஷேக்கை கொஞ்சம் இனிப்பாக்க சிறிது இயற்கைத் தேன், வெல்லம் அல்லது பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்க வேண்டாம்.
மக்கானா ஊட்டச்சத்து நிறைந்தது. ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக இருக்க உதவும்.