abp live

புரதச்சத்து நிறைந்த வெஜ் உணவுகள் லிஸ்ட் இதோ!

Published by: ஜான்சி ராணி
abp live

முட்டை, இறைச்சி சாப்பிடாவதர்களுக்கு வெஜ் உணவுகளில் கிடைக்கும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் பற்றி காணலாம்.

ABP Nadu


முருங்கைக்காய், முருங்கைக் கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடண்ட் நிறைந்தவை.


abp live

100 கிராம் முருங்கை கீரையில் 9 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது. வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கைக்கீரை, முருங்கை காய் சேர்ப்பது நல்லது.

abp live

பனீர் சாப்பிடுபவர்கள் என்றால், உணவில் அதை சேர்க்கலாம். பால் பொருட்கள் சாப்பிடாதவர்களுக்கு டோஃபு சாப்பிடலாம்.

abp live

புரத்தச்சத்து மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். தினமும் உணவில் புரச்சத்து இருப்பது அவசியம்.

abp live

கீரை வகைகளில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது நாம் அறிந்ததே. பாலக்கீரை அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

abp live

பாலக்கீரையில் கால்சியம், வைட்டமின் எ, சி, கே ஆகியவை நிறைந்தது. ஒரு கப் பாலக்கீரையில் சுமார் 5.4 கிராம் புரதம் உள்ளது.

abp live

பட்டாணியில் புரதச்சத்துடன் நார்ச்சத்தும் உள்ளது. 100 கிராம் பட்டாணியில் சுமார் 5 கிராம் புரோட்டீன் உள்ளது.

abp live

ப்ரோக்கோலி, காளான் ஆகியவற்றிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது. காளானில் வைட்டமின்,பி, செலினியம் ஆகிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க தேவையானவை இருக்கின்றன.

abp live

100கி காளானில் 3.1 கிராம் புரதம் உள்ளது. 100 கிராம் ப்ரோக்கோலியில் 2.8 கிராம் புரோட்டீன் இருக்கிறது.