நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக மிக அவசியம்
அதேசமயம், சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கலமா? கூடாதா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.
சாப்பிட்டு முடித்த பிறகு வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். அதனால், சாப்பிட்டு முடித்த பிறகு அதிகளவு தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல.
சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது ஆகும்.
அப்போதுதான், சாப்பிட்ட உணவின் செரிமானம் சீராக நடைபெறும்.
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மிகவும் மெதுவாக நடைபெறும்.
சாப்பிட்ட உடனே மிகவும் குளிர்ந்த நீரை குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது ஆகும்.
அதேபோல, தண்ணீரை எப்போதும் மெதுவாக குடிக்க வேண்டும்.