கோபத்தை குறைக்க10 ஈஸி டிப்ஸ்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மெதுவாக உள்ளே காற்று எடுத்து வெளியே விடுவதால் மனம் அமைதியாகும்.

கோபம் வந்தால் உடனே எதிர்வினை ஆற்றாமல் சிறிது நேரம் மௌனமாக இருப்பது கோபத்தை குறைக்கும்.

கோபம் வரும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலை குளிர்விக்கும்.

சூழலில் இருந்து சிறிது நேரம் விலகி இருப்பது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை மெதுவாக எண்ணுவதால் மனம் திசை மாறும்.

ஏன் கோபம் வந்ததோ அதை பேப்பரில் எழுதுவதால் மனசு லேசாகும்.

பிடித்த பாடல்களைக் கேட்டால் மன அழுத்தம் குறையும். கோபம் கட்டுக்குள் இருக்கும்.

நடைபயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் கோபத்தைக் குறைக்க உதவும்.

தூக்கமின்மை கோபத்தை அதிகரிக்கும். எனவே போதுமான தூக்கம் அவசியம்.