இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது ஏன்? சரிசெய்வது எப்படி?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பெண்கள், இரும்புச்சத்து குறைவாக உள்ள உணவை உட்கொண்டால் இந்த பிரச்சனை வரும். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால் இரும்புச்சத்து அளவு குறையும்.

கர்ப்ப காலத்தில் உடலில் இரும்புச்சத்து தேவை அதிகரிக்கிறது.

உடல் இரும்பை சரியாக உறிஞ்சாவிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆண்களோ பெண்களோ தேநீர் அல்லது காபி அதிகமாக குடிப்பதால் கூட இரும்புச்சத்து உடலில் சேராது.

பசலைக்கீரை, பருப்பு, பூசணி விதைகள், மாதுளை போன்ற உணவுகள் உணவில் இருக்க வேண்டும் இதனால் இரும்புச்சத்து கிடைக்கும்

எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி ஆகியவற்றுடன் சாப்பிட்டால் இரும்புச்சத்து நன்றாக உறிஞ்சப்படும்.

உணவுக்குப் பிறகு குறைந்தது 1 மணி நேரம் தேநீர், காபி அருந்துவதற்கு இடைவெளி விட வேண்டும்.