முட்டையுடன் சேர்த்து எந்த உணவுகளை எல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்

பசலைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முட்டையில் உள்ள புரதத்துடன் சேர்ந்து இரத்த சோகையை குறைக்க உதவுகிறது.

தக்காளி லைகோபினை கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆக்ஸிஜனேற்ற விளைவு அதிகரிக்கும்.

ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள வெண்ணெய் பழம் முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

முளைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் தசை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஓட்ஸ் போன்ற தானியங்களை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. எடை கட்டுப்பாட்டில் உதவும்.

கப்ஸிகமில் விட்டமின் சி அதிகம் உண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டையுடன் சேர்த்து ஆம்லெட்டாக சாப்பிட்டால் நல்ல சேர்க்கை.

சீஸில் கால்சியம், புரதம் சேர்ந்த நல்ல உணவு. முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமையாக மாறும்.

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் மூளை மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலம். முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் எனர்ஜி கிடைக்கும்.

பச்சை மிளகாய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். முட்டையுடன் சேர்த்து ஆம்லெட்டாக சாப்பிட்டால் சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.