கேரட் சாப்பிடுபவர்களே கவனம்.. இவ்வளவு பிரச்னை உண்டாகலாம்!
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருப்பதால் இது கண்கள், தோல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால், கேரட் அனைவருக்கும் ஏற்றதல்ல
கேரட் சாப்பிட்ட பிறகு அரிப்பு, வீக்கம், தொண்டையில் வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அதனை தவிருங்கள்
கேரட்டில் இயற்கையாகவே சர்க்கரை சற்று அதிகமாக உள்ளது. பச்சையாக கேரட் சாப்பிடலாம். ஆனால் ஜூஸாக குடிக்கும்போது கவனம் தேவை
கேரட்டில் ஆக்ஸலேட் உள்ளது, இது சிறுநீரக கற்களை அதிகரிக்கக்கூடும். எனவே, இதுபோன்ற நோயாளிகள் கேரட்டை குறைவாக சாப்பிட வேண்டும்.
அதிக கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சேர்ந்து சருமம் மஞ்சள் நிறமாக மாறக்கூடும். எனவே, அதை குறைவாக சாப்பிடுங்கள்.
கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அதிகமாக சாப்பிட்டால் வாயு, கனம், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் கேரட் சாப்பிடுங்கள்.