செரிமானம், சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை இஞ்சிக்கு உண்டு. இஞ்சி டீ அந்த நன்மைகளை உடலுக்கு தரும்.
இதில் ஆன்டி ஆக்சிடன்கள், நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. உடல் செரிமானத்தை சீராக்குகிறது.
ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் கொண்டது மட்சா டீ. வளர்சிதை மாற்றத்தை உடலில் ஏற்படுத்தும்.
தேங்காய் மிக மிக ஆரோக்கியமான ஒன்றாகும். தேங்காய் தண்ணீர் இயற்கை தந்த அருட்பிரசாதம் ஆகும். இதை குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், குளிமையும் உண்டாகும். இது ஒரு இயற்கையான எலக்ட்ரோலைட் பானம் ஆகும்.
புரதம், ஒமேகா சத்து நிறைந்தது இந்த சியா விதை. சியா விதை பானத்தை பருகினால் உடலுக்கு நன்மை ஆகும்.
பீட்ரூட் ஜுஸில் ஏராளமான நன்மைகள் உண்டு. இது சரும பராமரிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது.
முடி வளர்ச்சி, சூட்டை தணித்தல் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ குணம் கொண்டது கற்றாழை ஜுஸ். சரும பராமரிப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது ஆகும்.
மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட ஒன்றை காண இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதை தங்க பால் என்றே கூறலாம். இதை பருகினால் சரும, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகள் உண்டாகும்.
கீரைகள், பழங்கள் நிறைந்தவற்றால் இந்த ஜுஸ் தயாரிக்கலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும்.