உலகத்திலேயே அதிகளவு தேநீர் ( டீ) விரும்பி குடிக்கும் மக்கள் இந்தியாவில்தான் உள்ளனர். மற்ற நாடுகளில் காஃபி குடிக்கும் மக்கள்தான் அதிகம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

தேசிய தேநீர் நாள்

டீ-யின் பெருமையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ம் தேதி தேநீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Image Source: canva

கிரீன் டீ

கிரீன் டீ-யில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகளவு உள்ளது. இது எடை குறைப்பிற்கு நன்றாக உதவும்.

Image Source: Canva

ப்ளாக் டீ

இந்த ப்ளாக் டீ அதிக காஃபின் கொண்டது ஆகும். இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை ஆகும்.

Image Source: Canva

புதினா டீ

ஏராளமான மருத்துவ குணம் கொண்டது புதினா. இது செரிமானத்திற்கு மிக உகந்தது.

Image Source: Canva

சாமந்தி டீ (அ) கெமோமில் டீ

சாமந்தி டீ மிகவும் சாந்தப்படுத்தும் குணம் கெண்டது ஆகும். இதனால், நன்றாக தூக்கம் ஏற்படும்.

Image Source: Canva

ஊலங் டீ

ஊலங் டீ ஏராளமான நன்மைகளை உண்டாக்கியது. இதனால் உடலுக்கு நன்மைகள் உண்டாகும். இதன் விலை மிகவும் அதிகம்

Image Source: Canva

சிங்கப்பூரான் டீ

சிங்கப்பூரான் டீ கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது ஆகும்.

Image Source: Pinterest/ MoonPhazeSpiritVibez

வெள்ளை தேநீர்

அதிக ஆன்டி ஆக்சிடன்களை கொண்டது வெள்ளைத் தேநீர். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆகும். அதிக ஆன்டி ஆக்சிடன்களை கொண்டது வெள்ளைத் தேநீர். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆகும். இது காமேலியா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

Image Source: Canva

ரூய்பீஸ் டீ

இது காஃபின் இல்லாத டீ ஆகும். இதில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு இது பயன்படுத்தப்படுகிறது.

Image Source: Canva

செம்பருத்தி டீ

செம்பருத்தி ஏராளமான மருத்துவ குணம் கொண்டது. இதன் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் ஆரோக்கியமானது.

Image Source: Canva

இஞ்சி டீ

இஞ்சி நமது உணவில் பயன்படுத்தப்படும் பொருள். சளி, இருமல் சமயங்களில் இஞ்சி டீ இதமாக இருக்கும்.

Image Source: Canva