கொலஸ்ட்ரால், ட்ரை கிளிசரைடுகள், ரத்த அழுத்தத்தை குறைக்க மீன் எண்ணெய் உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக உள்ளது.
மன அழுத்தம், பிற மன நல பிரச்சினைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
பார்வை திறனை மேம்படுத்துவதில் மீன் எண்ணெய் பக்கபலமாக உள்ளது. வயது தொடர்பான மாகுலர் சிதைவு அபாயத்தை குறைக்கிறது.
நீண்ட நாட்களாக உடலில் உள்ள வலியை போக்குகிறது.
சிரங்கு, அரிப்பு போன்ற சரும பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
கல்லீரலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.
நினைவாற்றல் பாதிப்பை குறைக்கிறது. டிமென்ஷியா பாதிப்பையும் குறைக்கிறது.
நுரையீரல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ஆஸ்துமா பாதிப்பு கட்டுக்குள் வருகிறது.
எலும்பை வலுவாக்குவதில் மீன் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.