ஆக்சிஜனேற்றிகள், பாலிபினால்கள், லிக்னான்கள் இதில் உள்ளது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்பை கொண்டது.
சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. இதில் உள்ள துத்தநாகம், ஆக்சிஜனேற்றிகள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது.
ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் இதில் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அதிக ஆன்டி ஆக்சிடன்கள், துத்தநாகம் உள்ளிட்டவை இதில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலம் இந்த பூசணி விதையில் உள்ளது. இது தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. செரோடோனின், மெலடோனின் உற்பத்தியை இது அதிகரிக்கிறது.
பூசணி விதையில் அதிகளவு மெக்னீசியம் உள்ளது. இது ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்குகிறது.
உடல் எடையை குறைப்பதற்கு பூசணி விதை உதவுகிறது. இதில் நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளது. இது பசியை கட்டுப்படுத்துகிறது.
பூசணி விதையில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு பக்கபலமாக உள்ளது. ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு இது உதவிகரமாக உள்ளது. மலச்சிக்கலுக்கும் தீர்வாகும்.
இந்த பூசணி விதையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், துத்தநாகம் முடி மற்றும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் இதில் அதிகளவில் உள்ளது. எலும்புகளை வலுவாக்க இது உதவுகிறது.