செரிமானத்தை கெடுக்கும் உணவுகளை தொடர்ச்சியாக இரவில் சாப்பிட்டால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
காரமான உணவுகளை இரவில் சாப்பிடுவதால் அது அமிலத்தன்மையை அதிகரித்து தூக்கத்தை கெடுக்கும்.
குளிர்ச்சியான உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் சளித்தொல்லை உண்டாக வாய்ப்புகள் உண்டு. இதனால், அவதிப்பட நேரிடும்.
அதிக இனிப்புகள் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மாவுப்பொருட்களால் செய்யப்படும் இனிப்புகள் தூக்கத்தை பாதிப்பதுடன் செரிமானத்தையும் பாதிக்கும்.
டீ மற்றும் காஃபி போன்ற பானங்கள் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் வருவது தடைபடும்>
வறுத்த உணவுகள் உடலுக்கு எப்போதும் தீங்கு. குறிப்பாக, இரவில் வறுத்த உணவுகளை சாப்பிடுவது செரிமானத்தை மிக கடினமாக்கும்.
இரவு நேரத்தில் தொடர்ந்து அசெளகரியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பு, தூக்கமின்மை போன்ற பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும்.