உடல் ஆரோக்கியத்தில் பல்,வாய் சுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.




ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது அவசியம்.


காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது முக்கியம்.




பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும்.



கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகள்.



பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல்,



குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.



கார்பன்டை ஆக்ஸைடு கலந்த குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.


பற்களின் பாதுகாப்புக்கும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.



ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.