இயர்போன், ஹெட்போன்..எது பெஸ்ட்? உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்.

இயர்போன் மூலம் அதிக சத்தத்துடன், நீண்ட நேரம் பாட்டுக் கேட்கும்போது,

சத்தத்திலுள்ள அதிர்வு தொடர்ந்து சிறு நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அந்த நரம்புச்செல்கள் உணரும் திறனை இழக்கும்.

அதிக சத்ததினால் காதின் உள்பகுதி நரம்பு செல்கள் இறந்துவிட்டால் அவை மீண்டும் உருவாகாது. நிரந்தரமாக காது கேளாமல் போகலாம்.

காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனைச் சுத்தம் செய்யவேண்டும்.

60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காது பாதிப்பு அடைவதில் இருந்து பாதுகாக்கப்படும்.

85 டெசிபலுக்கு மேல் சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும்.

50 டெசிபலுக்கு குறைவாகவும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு குறைவாக இயர்போன் பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

இயர்போன்களுக்கு பதில் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தலாம். ஹெட்ஃபோனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதிலிருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறைக்கு நேரடியாக பாதிப்பை உண்டாக்காது

ஹெட்ஃபோன், இயர்போன் எதுவாக இருந்தாலும் அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிஷம் ஓய்வும், ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிஷம் ஓய்வும் கொடுக்க வேண்டும்.