சபரிமலை ஐயப்பன் கோவில் கடல் மட்டத்தில் இருந்து
914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.


48 நாட்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, 18 படிகள் ஏறி
ஐயப்பனை தரிசித்தால் வாழ்வின் முழுப் பலன்களையும் அடையலாம்.


சபரிமலைக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி பக்தர்கள் வருகை தருகிறார்கள்.



ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவில்
ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம். இதனைக் காண லட்சக்கணக்கானோர் வருகை தருவர்.


சபரிமலையில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து தயாரிக்கப்படும் அரவணை பாயாசம் புகழ்பெற்றது



ஐயப்பனுக்கான பாடல்களில் முக்கியமானது ‘ஹரிவராசனம்’.
இது இரவில் ஐயப்பனை உறங்கச் செய்வதற்காக இசைக்கப்படும் தாலாட்டாகும்


இந்த பாடலை கொன்னகத்து ஜானகி அம்மாள் என்பவர் 1923-ம் ஆண்டு இயற்றியதாக கூறப்படுகிறது
சபரிமலையில் 1952 ஆம் ஆண்டு முதல் இசைக்கப்பட்டு வருகிறது.


1975 ஆம் ஆண்டு வெளியான சுவாமி ஐயப்பன் படத்தில் இடம் பெற்ற
பாடகர் ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் தான் தற்போது இசைக்கப்பட்டு வருகிறது


கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும்
'ஹரிவராசனம்' என்ற பெயரில் விருதும், ரூ. 1 லட்சமும் வழங்கி கௌரவித்து வருகிறது


ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும்
கொண்டாட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் முடிவு செய்துள்ளது