சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நாயகிகளுள் வாணி போஜனும் ஒருவர் தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார் தெய்வமகள் மட்டுமன்றி, ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந்தாச்சு சீரியலிலும் நடித்தார் 2019 ஆம் ஆண்டு மீக்கு மாத்ரமே செப்தா படம் மூலம் பெரிய திரையில் தோன்றினார் 2020 ஆம் ஆண்டில் ஓ மை கடவுளே படத்தில் மீராவாக வந்து, பல பேருக்கு க்ரஷ்-ஆக மாறினார் விக்ரமுடன் மஹான் படத்திலும் இணைந்து நடித்தார் இவர் நடித்து இதுவரை, 5 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன இந்த தீபாவளியையொட்டி இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களும் சமீபத்தில் வைரலானது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸை வைத்துள்ளார் வாணி இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்