SP பாலசுப்ரமணியம் பாடலில் மட்டுமல்ல படிப்பிலும் சகலகலா வல்லவர்தான்.



தனது பொறியியல் படிப்பை தொடர அனந்தபூரில் JNTU கல்லூரியில் சேர்ந்தார்.



தனது வாழ்நாளில் அதிக பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.



ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 பாடல்கள் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 930 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.



இதுவரையில் 40,000+ பாடல்களைப் பாடியுள்ளார், இது உலகின் எந்தப் பாடகரிலும் முறியடிக்க முடியாத சாதனையாகும்.



எஸ்.பி.பி பாடுவதில் எந்த அளவிற்கு திறமையானவரோ அதே அளவிற்கு நடிப்பிலும். தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் சரளமாகப் பேசும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.



துணை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 72 படங்ககளில் எஸ்.பி.பி நடித்திருக்கிறார்.



இத்தனை பாடல்களை நேர்த்தியாகவும் வசீகரத்துடனும் பாடிய எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 46 படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.



ஒரு நாளில் அதிக பாடலை பாடியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எஸ்.பி.பி. திறமையான பாடகர் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பதிவு செய்துள்ளார்.



அதோடு ஒரு நாளில் 19 தமிழ் பாடல்களையும், இந்தியில் ஒரு நாளில் 16 பாடல்களையும் பதிவு செய்துள்ளார். 'கேளடி கண்மணி' படத்துக்காக 'மண்ணில் இந்தா' பாடலில் மூச்சு விடாமல் பாடியிருந்தார் என்பது நாம் அறிந்ததே!