விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பதிவு செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் நேற்று வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்ஷன் படம் வெளியாகியுள்ளாதால் மொத்த தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூடி ஒரே ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியுடன் படத்தை வரவேற்றனர். தமிழ்நாடு - ரூ 20 கோடி உலகம் முழுவதும் - ரூ 45 கோடி விரைவில் விக்ரம் திரைப்படம் 100 கோடியை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஓப்பனிங் திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் 3வது இடத்தில் உள்ளது. விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விக்ரம் வசூலில் சாதனைப்படைக்கும் என ரசிர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.