வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா!



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி



டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது



இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்



ஹன்சிகா அவரது வருங்கால கணவருடன் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார்



இதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது



இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்



இந்த நிலையில் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது



அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது



பல தரப்பான கருத்துகள் பரவி வருவது குறிப்பிடதக்கது