நடிகை ஹன்சிகா, மகாராஷ்டிராவில் பிறந்தவர் வட நாட்டில் இருந்து வந்திறங்கிய ஹீரோயின்களுள் இவரும் ஒருவர் இவர், மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் வாலு, புலி, சேட்டை என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் இவரும் நடிகர் சிம்புவும் சில வருடங்களுக்கு முன் காதலித்து வந்தனர் பின்பு இருவரும் பிரிந்து விட்டனர் தற்போது இவரது 50வது படமான ‘மஹா’ இன்று திரைக்கு வந்துள்ளது மஹா திரைப்படத்தில் சிம்பு ‘ஜமீல்’ என்ற கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தின் முன்னோட்ட காட்சியின்போது இவர் மஞ்சள் நிறம் புடவை அணிந்திருந்தார் இதன் விலை 71,000 ரூபாயாம்!