முக அழகை கூட்டும் கிளிசரினை எப்படி பயன்படுத்த வேண்டும்? கிளிசரின் முகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது முக பளபளப்பிற்கும் மென்மையான சருமத்திற்கும் பலர் கிளிசரினை பயன்படுத்துகின்றனர் ஆனால் சருமத்தில் கிளிசரினை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை இரவில் முதலில் முகத்தை சுத்தம் செய்து துடைக்கவும் அரை கப் தண்ணீரில் சில துளிகள் கிளிசரினை கலக்கி பருத்தி உருண்டையை நனைத்து தோலில் தடவவும் காலையில் எழுந்தவுடன் முகத்தை அலச வேண்டும் கண்களுக்கு அருகில் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் கிளிசரினை சாதாரண, வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தின் மீது பயன்படுத்தலாம் இதனால் சருமத்தின் நிறம் மேம்படலாம்