முட்டை கெட்டு போச்சா? கண்டுபிடிப்பது எப்படி?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

முட்டை நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இது புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.

Image Source: pexels

ஆனால் முட்டை கெட்டுப்போனால் நச்சாக மாறிவிடும். வயிற்று வலி, வாந்தி அல்லது தொற்று போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Image Source: pexels

ஆகவே முட்டை நன்றாக இருக்கிறதா? அல்லது கெட்டுப்போனதா என்பதை அறிவது மிகவும் அவசியம்.

Image Source: pexels

வாங்க, முட்டை நல்லதா இல்லையான்னு வீட்டிலேயே கண்டுபிடிக்க சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

Image Source: pexels

ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரை எடுத்து முட்டையைச் சேர்க்கவும்

Image Source: pexels

முட்டை கீழே மூழ்கினால் அது புதியது, மேலே மிதந்தால் அது கெட்டுப்போனது.

Image Source: pexels

இதற்கு மேலாக முட்டையை உடைத்து முகர்ந்து பார்க்கவும், அழுகிய நாற்றம் என்றால் முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

Image Source: pexels

மேலும், முட்டையை லேசாக அசைக்கவும். உள்ளிருந்து சப்-சப் என்ற சத்தம் வந்தால் அது கெட்டுப்போனது என்று அர்த்தம்.

Image Source: pexels

மேலும் முட்டை ஓட்டை சரிபார்க்கவும். உடைந்த, ஒட்டும் அல்லது கறை படிந்த ஓடு என்றால் முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

Image Source: pexels