முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 29.03.1984ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார்.

இவர் 1982ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இணைந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார்.

1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக பதவியை பெற்றார்.

1991ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படு தோல்வியை தழுவியது.

1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரை காவல்துறையினர் சொத்து குவிப்பு வழக்கில் முதல் முறையாக கைது செய்தனர்.

2003ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக இவர் பதவியேற்றார்.

இதன்பின்னர் மீண்டும் 2014ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் இவருக்கு 100 கோடி அபராதம் மற்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இவரை விடுவித்தது.

மீண்டும் 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அந்தாண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.