பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை தீபிகா படுகோன்
ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பிறகும் இவரது மார்கெட் குறையாமல் இருக்கிறது
சமீபத்தில் டைம்ஸ் 100 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்
மனநலன் குறித்து வெளிப்படையாக பேசியதற்காக இந்த பட்டியலில் இடம்பிடித்தார்
துபாயில் நேற்று இரவு TIME100 Impact Awards நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தனது கணவருடன் தீபிகா கலந்து கொண்டார்
ஃபியூச்சர் அருங்காட்சியகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
பளபளக்கும் மெல்லிய சேலையில் வந்த தீபிகா அனைவரையும் கவர்ந்தார்
அழகான தீபிகாவின் போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகின்றன
தீபிகாவின் ‘கெஹ்ரியான்’ திரைப்படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது