1940-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கேரளத்தின் கொச்சியில் எலிசபெத் ஜோசப்புக்கும், ஆகஸ்டின் ஜோசப்புக்கும் பிறந்தவர் யேசுதாஸ்
1960 ஆம் ஆண்டு முதன் முதலாக மலையாள சினிமா ஒன்றில் பாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
1963 ஆம் ஆண்டு வெளியான கொஞ்சும் குமரி திரைப்படத்தில் ‘ஆசை வந்த பின்னே‘ என்னும் பாடல் முதன் முதலாக யேசுதாஸ் குரலில் ஒலித்தது.
இந்தி, தமிழ், மலையாளம் , தெலுங்கு , கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் , அரபி, லத்தீன் பல மொழியில் இவர் பாடினார்.
ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் சேர்ந்து முறையாக யேசுதாஸ் சங்கீதம் பயின்றுள்ளார்.
யேசுதாஸின் குரலை தன் இசைக்கு மெருகேற்ற பயன்படுத்திக்கொண்டார் இளையராஜா
‘ஹரிவராசனம் சுவாமி விஸ்வமோகனம் ‘ என்ற பாடல் மூலம் தீவிர ஐயப்ப பக்தரான யேசுதாஸின் குரல் தினமும் அக்கோயிலில் ஒலித்து வருகிறது.
தன்னுடைய 62 ஆண்டுகால இசைப்பயணத்தில் கிட்டத்தட்ட 14 மொழிகளில் அரை லட்சம் பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார்.
1975 ஆம் ஆண்டே “பத்ம ஸ்ரீ” விருது, 1992 இல் இசைப்பேரறிஞர், சங்கீத் நாடக அகாடமி விருது பெற்றார்.