குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்



மோசமான உணவுகளால், வயிற்று வலி, வயிற்று போக்கு, வாந்தி போன்ற பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது



1 வயது நிறைந்த குழந்தைகளுக்கு நீங்கள் திட உணவுகளை ஆரம்பிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்



குழந்தையின் குடல் திட உணவுகளை சீரணிக்கின்ற வகையில் வளர்ச்சி பெற்று இருக்காது



குழந்தைகளுக்கு கொடுக்கூடாத உணவுகள் சில..



இந்த நட்ஸ் மற்றும் விதைகள் கடிக்க கடினமாக இருக்கும். இதனால் குழந்தைகள் அதை அப்படியே முழுங்க வாய்ப்பு உள்ளது



மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது



கேரட், திராட்சையை குழந்தைகள் அப்படியே முழுங்க வாய்ப்புள்ளது. இது அவர்களின் தொண்டையை அடைத்து விடலாம்



மிட்டாய்கள் மற்றும் சுவிங்கத்தை குழந்தைகள் விழுங்கி விடும் போது மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புள்ளது



செயற்கை குளிர்பானங்கள், பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அதிகளவில் உற்பத்தி செய்து பற்சொத்தையை ஏற்படுத்தும்