பால் கொழுக்கட்டையை ஈசியாக செய்வது எப்படி?

Published by: விஜய் ராஜேந்திரன்

1)

ஒரு கப் இடியாப்ப மாவை ஒரு bowl ல் போட்டு அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, கால் கப் அளவு துருவிய தேங்காய், மற்றும் ஒரு சிட்டிகை உப்பை தூவி நன்கு கலந்து கொள்ளவும்

2)

கலக்கிய மாவில் சுமார் 3 டேபிள் ஸ்பூன் அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

3)

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்

4)

தண்ணீர் கொதித்ததும் அதை சிறிது சிறிதாக ஒரு டேபிள் ஸ்பூன் மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விடவும்

5)

மாவு ஆறிய பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்

6)

அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவை போட்டு நன்கு கலக்கி சுட வைக்கவும்

7)

பால் கொதித்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்த்து 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை அப்படியே வேகவிடவும்

8)

15 நிமிடத்திற்கு பிறகு அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிண்டவும்

சூடான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டை தயார். இதை பண்டிகை காலங்களின் போது செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்