சியா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிகளவு ஆன்டி ஆக்சிடன்கள், ஒமேகா 3 கொழுப்பை கொண்டுள்ளது.
இதய ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு மற்றும் செரிமானத்திற்கு சியா விதைகள் பக்கபலமாக இருக்கிறது.
சரும ஆரோக்கியம், கூந்தல் வலிமை ஆகியவற்றிற்கு சியா விதைகள் பக்கபலமாக உள்ளது.
குடல் எரிச்சல், நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சியா விதைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
ரத்தம் தொடர்பான மருந்துகளை உட்கொள்பவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள ஒமேகா 3 ரத்தக்கசிவை உண்டாக்கும்.
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் சியா விதைகளை தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்த அளவை இது குறைக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகள் சியா விதைகளை தவிர்ப்பது நல்லது ஆகும்.