நான் ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து 300 மிலி தண்ணீர் சேர்க்கவும் இதில் 15 கிராம் கடல் பாசி, 3 ஸ்பூன் ரோஸ் சிரப், 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் கடல் பாசி கரைந்ததும் ஒரு ட்ரேவில் வடிக்கட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும் கெட்டியானதும் இதை கத்தியால் க்யூப்களாக வெட்டிக் கொள்ளவும் அரை லிட்டர் குளிர்ந்த திக்கான பாலில் 3 ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்க்கவும் இதில் ஐஸ் கியூப்ஸ், 3 ஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதை சேர்க்கவும் வெட்டி வைத்துள்ள ஜெல்லி க்யூப், நறுக்கிய தர்பூசணி துண்டுகளை சேர்க்கவும் இதை கலக்கி விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறலாம் இந்த சர்பத் சுவையானதாகவும், வெயிலுக்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கும்