வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் வரும் அறிகுறிகளை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

உடல்நலக் குறைவு

அடிக்கடி நோய்வாய்படும் ஒரு நபருக்கு வைட்டமின் டி குறைபாடாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும்.

Image Source: Canva

சோர்வு

போதுமான அளவு ஓய்வு எடுத்தாலும் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எப்போதும் சோர்வாக இருக்கும். உடல் அசதியாகவே இருக்கும்.

Image Source: Canva

தசைவலி

வைட்டமின் டி குறைபாடாக இருந்தால் தசை பலவீனமாக இருக்கும். அடிக்கடி உடல் வலிக்கும்.

Image Source: Canva

முடி உதிர்வு

போதுமான அளவு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் முடி உதிர்வு பிரச்சினை இருக்கும்.

Image Source: Canva

முதுகு வலி

நாள்பட்ட முதுகு வலி வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

Image Source: Canva

தோல் அரிப்பு

வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

Image Source: Canva

உடல் எடை அதிகரிப்பு

வைட்டமின் டி குறைபாடு இருந்தால் சீரற்ற முறையில் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

Image Source: Canva

ஈறு நோய்

ஈறுகள் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி குறைபாடால் ஈறுகளில் வீக்கம், பீரியடோன்டிஸ் ஏற்படும்.

Image Source: Canva