சத்தான சுவையான வேர்க்கடலை மாங்கா சாலட் ரெசிபி இதோ! மாங்காய், கேரட், வெள்ளரி ஆகியவற்றை நன்றாக அலசிக்கொள்ளவும் இவற்றின் மேற்புரத்தில் இருக்கும் தோலை நீக்கி, நூடுல்ஸ் போல் நீட்டமாக சீவிக்கொள்ளவும் அடுத்து வேர்க்கடலையை நன்றாக வறுத்து அதன் தோலை நீக்க வேண்டும் வேர்க்கடலை ஒன்றும் பாதியுமாக இடித்துக்கொள்ளவும் நல்லெண்ணெய், சோயா சாஸ், உப்பு, மிளகு ஆகியவற்றை ஒரு சின்ன பாத்திரத்தில் சேர்க்கவும் இதனுடன் எலுமிச்சை சாறு, நறுக்கிய பூண்டு, சில்லி ப்ளேக்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும் இந்த ட்ரெஸ்ஸிங்கை சீவி வைத்த காய்கறிகளுடன் சேர்த்து கிளறினால் சத்தான சாலட் தயார் வேண்டும் என்றால் இதனுடன் நறுக்கிய மாம்பழத்தை சேர்க்கலாம் சத்துமிக்க சுவையான இந்த சாலட்டை காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ எடுத்துக்கொள்ளலாம்