பாதாம், பேரீச்சம்பழத்தின் இயற்கையான இனிப்பு கலவையை பாலுடன் சேர்த்து இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் உடலை ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் ஆகியவற்றால் நிரப்புகிறது. இது பளபளப்பான சருமத்துடன் ஆற்றலை அளிக்கிறது.
இலவங்கப்பட்டையுடன் கலந்த வெதுவெதுப்பான பால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். செரிமானத்தை எளிதாக்கும். புலன்களை அமைதிப்படுத்தும். ஆழ்ந்த ஓய்வைக் கொடுத்து தூக்கத்தை மேம்படுத்தும்.
வாழைப்பழம் பால் தேன் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது எலக்ட்ரோலைட்டுகளை நிரப்பி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது பின் இதை எடுத்துக் கொள்ளலாம்.
பால் சேர்த்து ஓட்ஸ் தயாரித்தால் இதயத்திற்கு நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள பானம் இது. வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். செரிமானத்திற்கு உதவும். ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது காலை உணவுக்கு ஏற்றது.
சத்துக்கள் நிறைந்த ருசியான கொக்கோ மற்றும் பாதாம் பால் கலவை உங்கள் மனநிலையை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சாக்லேட் மீதான ஆசையை குறைக்கும்.
புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்துடன் கூடிய ரோஸ் மில்க் உடலை குளிர்விக்கும். மனதை அமைதிப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இது உங்கள் நாளை அமைதியாக மாற்றும்.
ஒமேகா-3கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த சியா விதை பால் செரிமானத்திற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. எடையை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
வாசனை மிகுந்த ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ நிறைந்த இந்த ஆடம்பர பானம் செரிமான சக்தியை அதிகரிக்கும். மனநிலையை மேம்படுத்தும். சருமத்திற்கு ஊட்டமளிக்கும். அதே நேரத்தில் புலன்களை அமைதிப்படுத்தும்.
பால் மஞ்சள் தேன் கலவை வீக்கத்தை குறைக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது தூங்குவதற்கு முன் சூடாக குடித்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும்