கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 5 வெங்காயத்தை உரித்த பிறகு இரண்டாக வெட்டி தண்ணீருக்குள் 10 நிமிடம் வைத்திருந்தால், வெங்காயம் நறுக்கும் பொழுது கண்ணில் வரும் எரிச்சலை நிறுத்தலாம் ஆப்பிளை வெட்டும் பொழுது கத்தியில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு தடவி வெட்டுங்கள். இதனால் ஆப்பிள் நிறம் மாறாமல் Fresh ஆக இருக்கும் பாயசத்தில் முந்திரிக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை சிறு துண்டாக நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்தால் சுவையாக இருக்கும் அசைவ குருமா செய்யும் போது துருவிய தேங்காயுடன், முந்திரி சேர்த்து அரைத்து பேஸ்டாக குருமாவில் சேர்த்தால் திக்காகவும், சுவையாகவும் இருக்கும் எலுமிச்சை பழ சர்ப்பதில் சிரிதளவு இஞ்சி சாறு சேர்த்தால் சர்ப்பத்தின் சுவை அதிகரிக்கும் இட்லி கல்லு போல இருந்தால், இட்லி மாவில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இட்லி சூட்டால் சாப்டாக இருக்கும் பனீர் சூடான உப்பு தண்ணீரில் போடு எடுத்தால் மென்மையாகிவிடும், அதன் பின்னர் கிரேவி செய்தால் சுவையாக இருக்கும் சப்பாத்தி மிருதுவாக, சுவையை வருவதற்கு கோதுமை மாவு அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைக்கவும்