விந்தணுக்களை கெட்டிப்படுத்தும் பசலைக்கீரை - கோடை நோய்களுக்கு தீர்வு

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பசலைக்கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தாராளமாக உள்ளன. கோடை காலத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.

பசலைக்கீரையுடன் பருப்பு, காய்கறிகளை இணைத்து சாப்பிடுவதால் மட்டும் அல்ல, அதன் சாறு குடிப்பதன் மூலமும் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

பசலைக்கீரை சாறு வயிற்றில் உள்ள பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்கும். கால் மூட்டுகளில் வரக் கூடிய வாதத்தை போக்கக்கூடியது

இந்த நீரில் அதிக நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.

பசலைக்கீரை சாறு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு பிரச்னைகளுக்கு தீர்வாகிறது

பசலைக்கீரை சாறு நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, நீர்ச்சுருக்கு, சிறுநீரகத்தை அதிகரித்து உட்சூட்டை குறைக்க உதவும்

பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இதனை சாப்பிடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கி கண்ணுக்கு அதிக நன்மை தரும்.

விந்தணுக்களை கெட்டிப்படுத்தி இல்லற வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற உதவும்