ஊறுகாய்க்கு என்று தனி சாப்பாட்டு பிரியர்கள் பட்டாளமே உள்ளது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

பச்சை மிளகாய் ஊறுகாய் - ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா

கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய் தூள், வெந்தயம் சேர்த்து இந்த காரமான பச்சை மிளகாய் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. இது ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ராவில் பிரபலம்.

Image Source: Canva

ஆந்திராவின் கோங்குரா ஊறுகாய்

ஆந்திராவின் அடையாளமாக இந்த கோங்குரா ஊறுகாய் உள்ளது. புளிப்பு சுவையுடன் புளிச்ச கீரை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

Image Source: Pinterest/ pushmycart

தேங்காய் ஊறுகாய்

தேங்காயை துருவி இந்த ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஊறுகாய் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: Twitter/ whoolockgibbon

அசாமின் வாழைப்பூ ஊறுகாய்

வெல்லம், எலுமிச்சை சாறு, மசாலா பொருட்கள் ஆகியவற்றுடன் வாழைப்பூவைச் சேர்த்து இந்த ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. அசாமில் இது மிகவும் பிரபலம்.

Image Source: Pinterest/ juliesaj

காஷ்மீரின் தாமரைத் தண்டு ஊறுகாய்

தாமரைத் தண்டு கொண்டு மிகவும் மொறுமொறுப்பாக செய்யப்படும் ஊறுகாய் இந்த தாமரைத்தண்டு ஊறுகாய். இது ஜம்மு காஷ்மீரில் பிரபலம்.

Image Source: Twitter/ Cool_My_World

ஆந்திராவின் தக்காளி ஊறுகாய்

தக்காளியையும், புளியையும் சேர்த்து புளிப்பு மற்றும் காரமான சுவையில் இந்த ஊறுகாய் உருவாகிறது. இது ஆந்திராவில் பிரபலம்.

Image Source: Pinterest/ srividhyam

முருங்கைக்காய் ஊறுகாய்

காரமான, புளிப்பான சுவை கொண்டது இந்த முருங்கைக்காய் ஊறுகாய். இது தென்னிந்தியாவில் பரவலாக செய்யப்படுகிறது.

Image Source: Pinterest/ raginimaney

மகாராஷ்ட்ராவின் ஆரஞ்ச் ஊறுகாய்

இந்த ஆரஞ்சு ஊறுகாய் ஆரஞ்சுப்பழ தோல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. புளிப்பு மற்றும் இனிப்பு சுவையில் இது இருக்கும்.

Image Source: Pinterest

தெலங்கானாவின் மஞ்சள் ஊறுகாய்

குர்குமின் அதிகம் கொண்ட நல்ல ஆக்சிஜனேற்றியாக இந்த மஞ்சள் ஊறுகாய் உள்ளது.

Image Source: Pinterest

தமிழ்நாட்டின் பூண்டு ஊறுகாய்

தமிழ்நாட்டின் பூண்டு ஊறுகாய் மிகவும் பிரபலம். பூண்டு மூலமாக இந்த ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. ஆந்திராவிலும் இந்த ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.

Image Source: Pinterest/ playfulcooking