இதய நோயாளிகள் 70 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொக்கோ கொண்ட டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.



டார்க் சாக்லேட் இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஆனால், சிறிய அளவில் சாப்பிட வேண்டும். தினமும் சாப்பிடாமல், எப்போதாவது சாப்பிடலாம்.



இதய நோயாளிகள் அவ்வப்போது சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?



இதயத்தின் ஆரோக்கியத்திற்கு கொலஸ்ட்ரால் முற்றிலும் நல்லது அல்ல. டார்க் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ராலை அதாவது LDL அளவைக் குறைக்கிறது.



டார்க் சாக்லேட் சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும், அதே நேரத்தில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.



டார்க் சாக்லேட் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க ரத்த அழுத்தத்தை குறைவாக வைத்திருப்பது அவசியம்.



இதயத்திலும் உடலின் எல்லாப் பகுதிகளிலும் ரத்தம் மற்றும் ஆக்சிஜன் நன்றாகச் செல்ல டார்க் சாக்லேட் உதவுகிறது.



உடலில் ஏற்படும் அழற்சி பிரச்சனைகளை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் உதவுகிறது. பிளேட்லெட்டுகளின் அளவை சரியான அளவில் பராமரிக்கிறது. இதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.



பலர் சாக்லேட் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சாதாரண சாக்லேட் எடை அதிகரிக்கும். எனவே டார்க் சாக்லேட் உடன் வைத்திருங்கள்.



இதயத்தில் ரத்தம் உறைந்து எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க டார்க் சாக்லேட் உதவுகிறது.