இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினையால் இனி அவதி பட தேவையில்லை! அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் துரித உணவுகளை உட்கொள்வதால் அதிகமாகிவிட்டன இது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையென்றாலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையை பாதிக்கலாம் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபட இந்த உணவுகளை உண்ணுங்கள் தினமும் காலையில் தேனுடன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிப்பதால், மலச்சிக்கல், செரிமானக் கோளாறு குணமாகலாம் எலுமிச்சை சாறு செரிமான அமைப்பை பலப்படுத்துவதுடன், வயிற்றை சுத்திகரித்து ஒட்டுமொத்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது சீரகத் தண்ணீர் நம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது உணவில் கற்றாழை சாற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது ஓமம் கலந்த தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது